ஒரு குடம் தண்ணீருக்காக பல மணி நேரம் காத்திருக்கும் அவலம்

ஆரணி அருகே ஒரு குடம் தண்ணீருக்கு பொதுமக்கள் பல மணி நேரம் காத்துக்கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
x
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல இடங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பையூர் கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் நகர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு விநியோகிக்க மினி டேங்க்கில் தண்ணீர் வைக்கப்படுவது வழக்கம். ஆனால் அந்த மினி டேங்கில் தண்ணீர் நிரப்பப்படாமல் உள்ளது. தற்போது நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.  இதில் இருந்து தண்ணீர் மெதுவாக வருவதால் ஒரு குடம் பிடிக்க அரை மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது.  தண்ணீர் பிடிக்க பல மணி நேரம் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டள்ளதால் பொதுமக்கள் பலரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்