ரவுடி வல்லரசு பற்றிய புதிய தகவல்கள்...

ரவுடி வல்லரசுவை முதலில் பிடிக்கச் சென்ற காவலர் பவுன்ராஜை, அரிவாளால் வெட்டியதில் அவர் பலத்த காயமடைந்தார்.
ரவுடி வல்லரசு பற்றிய புதிய தகவல்கள்...
x
ரவுடி வல்லரசுவை முதலில் பிடிக்கச் சென்ற காவலர் பவுன்ராஜை, அரிவாளால் வெட்டியதில் அவர் பலத்த காயமடைந்தார். ஸ்டான்லி மருத்துவமனையில் அவருக்கு தலையில் 28 தையல்கள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி வல்லரசு மற்றும் கதிர் இருவருமே பவுன்ராஜை சம்பவ இடத்துக்கு வரவழைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று இரவு வியாசர்பாடி காவல் நிலையத்துக்கு பேசிய மர்ம நபர்கள், ரவுடி கதிர் மற்றும் ரவுடி வல்லரசு இருவரும் வியாசர்பாடி பிஎஸ்என்எல் அருகே பதுங்கி இருப்பதாக தகவல் கொடுத்துள்ளனர். இதன்பேரில், பவுன்ராஜ் சென்றபோது தான், அரிவாளால் பவுன்ராஜ் தலையில் வெட்டியுள்ளனர். இதற்கிடையே, சென்னையை கலக்கிய குன்றத்தூர் வைரம் என்ற ரவுடியின் அக்காள் மகன் தான் ரவுடி கதிர் என்பதும் அவனது கூட்டாளி ரவுடி வல்லரசு என்பதும் தெரிய வந்துள்ளது. ரவுடி வைரம், கடந்த இரண்டு ஆண்டுகளாக குற்றச் செயலில் ஈடுபடாத நிலையில், ரவுடியாக கதிர் வலம் வந்துள்ளான். 

Next Story

மேலும் செய்திகள்