சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் : லாரிகளை எதிர்பார்த்து காத்துக் கிடக்கும் மக்கள்

குடிநீர் தேவைக்காக நாள்தோறும், வேலைக்கு செல்லாமல் தண்ணீர் லாரிகளை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வட சென்னை மக்கள் தெரிவித்து உள்ளனர்.
x
குடிநீர் தேவைக்காக  நாள்தோறும், வேலைக்கு செல்லாமல் தண்ணீர் லாரிகளை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வட சென்னை மக்கள் தெரிவித்து உள்ளனர். வடசென்னை பகுதிகளான தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், ராயபுரம் பகுதிகளில் நீண்ட கால பிரச்சினையாக நீடித்து வரும் குடிநீர் தேவையைத் தீர்க்க முடியாமல் மாநகராட்சி நிர்வாகம் தவித்து வரும் நிலையில், இந்தாண்டு சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  வீடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த குடிநீர் குழாயில் துர்நாற்றமுடன் கழிவு நீர் மட்டுமே வருவதாக  வடசென்னை மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.   இதனால் வேலைக்கு செல்ல முடியாமல், வருவாயை இழக்கும் நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டு உள்ளதாக வடசென்னை மக்கள் தெரிவித்துள்ளனர். குடி தண்ணீருக்காக,  நாள் ஒன்றுக்கு 50 ரூபாய் வீதம் செலவு செய்யும் நிலையை தங்களால் சமாளிக்க முடியவில்லை என வேதனையோடு வடசென்னை மக்கள் கூறுகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்