தங்கும் விடுதிகளில் தொடர்ந்து 3 வது நாளாக தற்கொலை : திருவல்லிக்கேணியில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால் பரபரப்பு
பதிவு : ஜூன் 12, 2019, 03:13 PM
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தங்கும் விடுதிகளில் கடந்த 3 நாட்களில் அடுத்தடுத்து நடந்த தற்கொலை சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் மட்டும் 175 தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. குறைந்த வாடகைக்கு அறைகள் கிடைப்பதால் வேலை தேடி வருவோர், தொழில் நிமித்தமாக சென்னை வருவோர் திருவல்லிக்கேணி பகுதிக்கு வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு தாசுதி கான் தெருவில் உள்ள தங்கும் விடுதியில் தூத்துக்குடியை சேர்ந்த மரிய பிரான்சிஸ் பிரபு என்பவர் உயிரிழந்து கிடந்தார். நேர்முகத் தேர்வுக்கு வந்த அவர், மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன் விடுதியில் தங்கியிருந்த கன்னியாகுமரியை சேர்ந்த 4 பேர் கடன் பிரச்சினையால் தற்கொலைக்கு முயன்றதில் ஒருவர் உயிரிழந்தார். இதே போல் நேற்று முன்தினம் காதல் ஜோடி ஒன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் காஜல் என்ற பெண் உயிரிழந்தார். தொடர்ந்து 3 வது நாளாக மீண்டும் திருவல்லிக்கேணி தங்கும் விடுதியில் தற்கொலை சம்பவம் நடந்துள்ளது. விடுதிகளில் தங்குவோர் குறித்த முழுவிபரங்களையும் கேட்ட பிறகே அறை தருவதாகவும், குடும்ப பிரச்சினையால் இதுபோன்ற தற்கொலைகள் நடப்பதாகவும் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1222 views

பிற செய்திகள்

கடும் வறட்சி : விதைக்காக வைக்கப்பட்டிருந்த சின்ன வெங்காயம் விற்பனை

நாமக்கல் அருகே கடும் வறட்சி காரணமாக விதைக்காக வைக்கப்பட்டிருந்த சின்ன வெங்காயத்தை உணவுக்காக விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

5 views

காரைக்குடி : புது மணப்பெண் தற்கொலை - வரதட்சணை கொடுமை என பெற்றோர் குற்றச்சாட்டு

காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தானை சேர்ந்த கார்த்தி என்பவரின் மனைவி கஸ்தூரி வரதட்சணை கொடுமை காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

9 views

தமிழகத்தில் இந்த ஆண்டின் உச்சபட்ச வெயில் 111.2 டிகிரி

இந்த ஆண்டின் அதிகபட்சமாக, திருத்தணியில் 111 புள்ளி 2 டிகிரி வெயில் பதிவானது.

49 views

தமிழகத்தில் மருத்துவர்கள் நாளை வேலைநிறுத்தம்

தமிழகத்தில், மருத்துவர்கள், நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

203 views

பிரம்மதேசம்புதூர் : அரசு மதுபான கடை திறக்க எதிர்ப்பு - வட்டாட்சியரை முற்றுகையிட்ட கிராம மக்கள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பிரம்மதேசம் புதூரில் அரசு மதுபான கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வட்டாட்சியரை முற்றுகையிட்டனர்.

4 views

வேலூரில் நீர் உறிஞ்சு குழிகளால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

வேலூரில் நீராதாரம் பெருக்க மலைகளில் அமைக்கப்பட்டுள்ள நீர் உறிஞ்சு குழிகளால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.