பழனி தண்டாயுதபாணி கோயில் உண்டியல் எண்ணிக்கை

பழனி தண்டாயுதபாணி கோயில் உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 84 லட்சம் ரூபாய் கிடைத்தது.
பழனி தண்டாயுதபாணி கோயில் உண்டியல் எண்ணிக்கை
x
பழனி தண்டாயுதபாணி கோயில் உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 84 லட்சம் ரூபாய் கிடைத்தது. கோடை விடுமுறையையொட்டி பக்தர்கள் வருகை அதிகரித்ததன் காரணமாக 33 நாட்களில் அனைத்து உண்டியல்களும் நிரம்பின. இதனையடுத்து இருநாட்கள் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் காணிக்கையாக சுமார் 2 கோடியே 84 லட்சம் ரூபாய் கிடைத்தது.  தங்கம் ஆயிரத்து 117கிராமும், வெள்ளி 17 ஆயிரத்து 90 கிராமும் கிடைத்தன. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஜப்பான், உள்ளிட்ட நாடுகளின் கரன்சிகள் 950 கிடைத்தன. உண்டியல் எண்ணிக்கையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள்  500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்