மழை பெய்ய வேண்டி வினோத வழிபாடு : கொடும்பாவிக்கு இறுதி சடங்கு - கண்ணீர் வழிபாடு

திருத்தணியை அடுத்த மாணவூரில் மழை பெய்ய வேண்டி வினோத வழிபாடு நடத்தப்பட்டது.
மழை பெய்ய வேண்டி வினோத வழிபாடு : கொடும்பாவிக்கு இறுதி சடங்கு - கண்ணீர் வழிபாடு
x
திருத்தணியை அடுத்த மாணவூரில் மழை பெய்ய வேண்டி வினோத வழிபாடு நடத்தப்பட்டது. வழிபாட்டின் போது அரக்கி வடிவத்தில் கொடும்பாவி செய்த பொதுமக்கள் அதற்கு மாலையிட்டு இறுதி சடங்குகள் செய்தனர். பின்னர் கிராம பெண்கள் கொடும்பாவி முன் அமர்ந்து கண்ணீர் விட்டு அழுது வழிபாடு நடத்தினர். தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க ஏரிக்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்ட கொடும்பாவி எரித்து சாம்பல் ஆக்கப்பட்டது. தண்ணீர் பஞ்சம் ஏற்படும் காலங்களில் இது போன்ற வழிபாடு நடத்தப்பட்டால் மழை பெய்யும் என்பது நீண்டகால நம்பிக்கை என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்