"4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்" - முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி சாலை மறியல்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி பெண்கள் காலி குடங்களுடன், மீஞ்சூர் - திருவொற்றியூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் - முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி சாலை மறியல்
x
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி பெண்கள் காலி குடங்களுடன், மீஞ்சூர் - திருவொற்றியூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கவுண்டர்பாளையம், சுப்பாரெட்டிபாளையம், பள்ளிபுரம், கொண்டக்கரை உள்ளிட்ட பகுதிகளில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். நான்கு நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் குடிநீரும் உவர்ப்பு நீராக இருப்பதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாக தெரிவித்த பெண்கள், பணம் கொடுத்து தண்ணீரை வாங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டு உள்ளதாக கூறினர். மேலும் தங்களது கிராமத்தில் இருந்து ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் உறிஞ்சி சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு அனுமதியின்றி விற்பனை செய்து வருவதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அதிகாரிகளிடம் பேசி குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்