ரூ.30 கோடி வங்கி கடன் மோசடி வழக்கு : கோபால கிருஷ்ணனுக்கு 3 ஆண்டு சிறை

வங்கி கடன் மோசடி வழக்கில், இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபால கிருஷ்ணன் உள்பட 17 பேருக்கு, தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ரூ.30 கோடி வங்கி கடன் மோசடி வழக்கு : கோபால கிருஷ்ணனுக்கு 3 ஆண்டு சிறை
x
சென்னையை சேர்ந்த 7 தனியார் நிறுவனங்கள் கட்டுமான பணிக்காக, அண்ணா சாலை, எழும்பூர், திருமங்கலம், கோடம்பாக்கம், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட 6 இந்தியன் வங்கி கிளைகளில், கடந்த 1995 - 1996ம் ஆண்டில் 30 கோடி ரூபாய் கடன் பெற்றன. இதில் முறைகேடு நடந்ததாக எழுந்தபுகாரை தொடர்ந்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்ததாக இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் வங்கி கிளை மேலாளர்கள், தனியார் நிறுவன உரிமையாளர்கள் உள்பட 27 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது 3 பேர் இறந்து விட்டனர்.மீதமுள்ள 24 பேர் மீதான வழக்கை விசாரித்த, சென்னை சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி திருநீலபிரசாத், கோபாலகிருஷ்ணன் மற்றும் ஏ.வி.சண்முகசுந்தரம், சோமயாஜி, சுப்பிரமணியன் உள்பட 17 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், மொத்தம் 7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்