அரசு பள்ளிக்கு தங்களால் இயன்ற சீர்வரிசை அளித்த பழங்குடியின மக்கள்

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே மலைமேல் அமைந்துள்ள தோட்டமலை அரசு பள்ளிக்கு, தங்களால் இயன்ற சீர்வரிசையை ஏழை பழங்குடியின மக்கள் அளித்துள்ளனர்.
அரசு பள்ளிக்கு தங்களால் இயன்ற சீர்வரிசை அளித்த பழங்குடியின மக்கள்
x
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே மலைமேல் அமைந்துள்ள தோட்டமலை அரசு பள்ளிக்கு, தங்களால் இயன்ற சீர்வரிசையை ஏழை பழங்குடியின மக்கள் அளித்துள்ளனர். பள்ளிக்கு செல்ல சரியான சாலை வசதி கூட இல்லாத இந்த பகுதியில், பழங்குடியின மக்கள் தங்களை பிள்ளைகளை பெரும் சிரமத்திற்கு இடையில் படிக்க வைக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் ஊர்தோறும் நடைபெறும் சீர்வரிசை திருவிழாவை போல தங்களது பிள்ளைகளுக்கும் சீர்வரிசை செய்ய எண்ணிய மக்கள், தனியார் அறக்கட்டளையின் உதவியுடன் தங்களால் முடிந்த வரையிலான சீர்வரிசை வழங்கி சிறப்போடு நிகழ்த்தி காட்டினர். இந்நிலையில் தங்கள் பகுதியின் வளர்ச்சிக்கும், அரசு பள்ளியின் வளர்ச்சிக்கும் உதவிகள் செய்து தர அங்குள்ள மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்