நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் விவரம் : 60% பழைய மாணவர்கள் என தகவல்

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களில் 60 விழுக்காட்டினர் பழைய மாணவர்கள் என்பதால் வாய்ப்பு பறிபோகுமோ என புதிய மாணவர்களுக்கு கலக்கம் அடைந்துள்ளனர்.
நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் விவரம் : 60% பழைய மாணவர்கள் என தகவல்
x
கடந்த 5ஆம் தேதி வெளியான நீட் தேர்வு முடிவில், அதிக மதிப்பெண் பெற்றவர்களில் 60 விழுக்காட்டினர் பழைய மாணவர்கள் என மருத்துவ கல்வி இயக்குநரக வட்டாரம் தெரிவித்துள்ளன. மொத்தம் உள்ள மருத்துவ படிப்பு சேர்க்கையில் பெரும்பாலான இடங்கள் பழைய மாணவர்களுக்கு போகும் என்பதால், முதல் முறையாக தேர்வு எழுதிய மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 40 விழுக்காடு இடங்களே  கிடைக்க வாய்ப்பிருப்பதால் அவர்கள் கலக்கத்தில் உள்ளனர். இந்த நிலையை மாற்ற, மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்கான வரையறை நிர்ணயிப்பதோடு மட்டுமின்றி கடுமையான கட்டுபாடுகளை விதிக்க வேண்டும் என புதிய மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்