மின்வாரிய உதவி பொறியாளர் பணியிடம் தொடர்பான வழக்கு : தேர்வு பட்டியலில் உள்ள வெளி மாநிலத்தோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

உதவி பொறியாளர் பணியிடம் தொடர்பாக, மின் வாரிய தலைமை பொறியாளர் 2 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மின்வாரிய உதவி பொறியாளர் பணியிடம் தொடர்பான வழக்கு : தேர்வு பட்டியலில் உள்ள வெளி மாநிலத்தோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு
x
புதுக்கோட்டை திருவாப்பூரைச் சேர்ந்த சக்கரவர்த்தி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். கடந்த 2018 பிப்ரவரி 14-ல் உதவி பொறியாளர் பணியிட தேர்வில் இட ஒதுக்கீட்டு கொள்கை முறையாக பின்பற்றப்படவில்லை என ஏப்ரல் 27-ல் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாகவும், அதில், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பரிசீலிக்காமல் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளதாகவும் கூறி இருந்தார். தேர்வு பட்டியலை ரத்து செய்து,  இட ஒதுக்கீடு கொள்கையை பின்பற்றி புதிய  தேர்வுப் பட்டியலை வெளியிட உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறி இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார்,  மின்வாரிய தலைமை பொறியாளர், 2 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும், பணி நியமனம் என்பது, இந்த வழக்கில் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என தெரிவித்ததோடு, தேர்வு பட்டியலில் உள்ள வெளி மாநிலத்தோருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்