வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி: வழக்கை ஏன் எதிர்கொள்ளக் கூடாது? - செந்தில் பாலாஜிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

மோசடி குற்றசாட்டில் முகாந்திரம் இருப்பதால், வழக்கை ஏன் எதிர்கொள்ளக் கூடாது என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
x
போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த போது வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல்வேறு நபர்களிடம், 95 லட்சம் மோசடி செய்ததாக கணேஷ்குமார் என்பவர் கடந்த 2016 ம் ஆண்டு மத்திய குற்றபிரிவில் புகார் கொடுத்தார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீஸார், திமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி உட்பட 4 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றசாட்டுக்கு ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ள நிலையில், வழக்கு விசாரணையை ஏன் எதிர்கொள்ளக் கூடாது? என கேள்வி எழுப்பினார். அப்போது செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், கூடுதல் நீதிமன்ற உத்தரவுகள் தாக்கல் செய்யவுள்ளதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என கோரினார். இதை ஏற்று விசாரணையை ஜூன் 18 ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்