வறண்டு போன வனக்குட்டைகள் - தாகத்தில் தவிக்கும் வன உயிரினங்கள்

நீர்க்குட்டைகள் வறண்டு போய் உள்ளதால், மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் விலங்குகள் தண்ணீர் இன்றி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வறண்டு போன வனக்குட்டைகள் - தாகத்தில் தவிக்கும் வன உயிரினங்கள்
x
கடும் கோடை காரணமாக நீர்க்குட்டைகள் வறண்டு போய் உள்ளதால், கோவை மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் விலங்குகள் தண்ணீர் இன்றி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். காட்டுக்குள் வனத்துறையினரால் கட்டப்பட்டுள்ள மழை நீர் தடுப்பணைகள் காய்ந்து கிடப்பதாலும், வனத்தில் உள்ள குளம், குட்டைகள் வறண்டு போய் உள்ளதாலும் விலங்குகள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றன. இங்கு எவ்வித கட்டுப்பாடுமின்றி நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் நீரோட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாவும்  அதனை மாவட்ட நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்