விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர் மாயம் : காவல் நிலையம் முன்பு சகோதரர் அரைநிர்வாண போராட்டம்

திருப்பூர் வாவிபாளையத்தில் கொள்ளை வழக்கு தொடர்பாக எம்.எஸ். நகரில் வசித்து வரும் மாநகராட்சி ஒப்பந்ததாரர் தினகரன் என்பரது சகோரர் ராஜாவை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர் மாயம் : காவல் நிலையம் முன்பு சகோதரர் அரைநிர்வாண போராட்டம்
x
6 நாட்கள் ஆகியும் ராஜா வீடு திரும்பாததால் அவரது சகோதரர் தினகரன் இதுகுறித்து திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் விசாரித்துள்ளார். ஆனால் ராஜா குறித்து போலீசார் தகவல் தெரிவிக்க மறுத்ததால் விரக்தி அடைந்த தினகரன், காவல் நிலையம் முன்பு அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து அவரை சமாதானப்படுத்திய போலீசார் அவரது சகோதரர் பற்றிய தகவலை தெரிவித்து அனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்