பெரிய கோயில் சிற்பங்களுடன் அத்துமீறல் : மதுரை இளைஞர் திருச்சியில் கைது

தஞ்சாவூர் பெரிய கோயில் சிற்பங்களுடன் சல்லாபம் செய்வதை போல இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
பெரிய கோயில் சிற்பங்களுடன் அத்துமீறல் : மதுரை இளைஞர் திருச்சியில் கைது
x
தஞ்சாவூர் பெரிய கோயில் சிற்பங்களுடன் சல்லாபம் செய்வதை போல இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.  இதுகுறித்து திருச்சி மாநகர ஆணையர் அமல்ராஜ் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். மதுரை ஒத்தகடையை சேர்ந்த முஜிபுர் ரகுமான், இந்த செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. திருச்சி கல்லுக்குழியில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வந்த முஜிபுர் ரகுமான் மீது கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்ததுடன்,  அவரை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்