இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் - போலீசார் அதிரடி : ஹெல்மெட்டுடன் வந்தால் தான் இருசக்கரவாகனம்...

அருப்புக்கோட்டையில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளிடம் இருந்து இருசக்கரவாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், ஹெல்மெட்டுடன் வந்து இருசக்கரவாகனத்தை பெற்றுசெல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் - போலீசார் அதிரடி : ஹெல்மெட்டுடன் வந்தால் தான் இருசக்கரவாகனம்...
x
அருப்புக்கோட்டையில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளிடம் இருந்து இருசக்கரவாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், ஹெல்மெட்டுடன் வந்து இருசக்கரவாகனத்தை பெற்றுசெல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஹெல்மெட் அணியாமல் வரும் வாகனங்களை ஏன் பறிமுதல் செய்ய கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், அருப்புக்கோட்டை போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். திருச்சுழி சாலை, விருதுநகர் சாலை, மதுரை சாலை என பல இடங்களில் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், ஹெல்மெட் இல்லாமல் வந்த 300க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளை இருசக்கர வாகனத்தோடு காவல்நிலையம் அழைத்து சென்றனர்.  அங்கு வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஹெல்மெட்டுடன் வந்தால் மட்டுமே இருசக்கரவாகனம் தரப்படும் என போலீசார் திட்டவட்டமாக கூறிவிட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்