வங்கிச் சேவைக்கு புரோக்கர் மூலம் லஞ்சம் : பாஜகவினர் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டியில் இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு கல்விகடன், தொழிற்கடன், வீட்டுக்கடன், வாகனக்கடன் என அனைத்து சேவைகளுக்கும் புரோக்கர் மூலம் பணம் கொடுத்தால் தான் செயல்படுத்தப்படுவதாக கூறி, வங்கியை பாஜகவினர் முற்றுக்கையிட்டனர்.
வங்கிச் சேவைக்கு புரோக்கர் மூலம் லஞ்சம் : பாஜகவினர் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம்
x
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டியில் இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு  கல்விகடன், தொழிற்கடன், வீட்டுக்கடன், வாகனக்கடன் என அனைத்து சேவைகளுக்கும் புரோக்கர் மூலம் பணம் கொடுத்தால் தான் செயல்படுத்தப்படுவதாக கூறி, வங்கியை  பாஜகவினர் முற்றுக்கையிட்டனர். பின்னர் பாஜக ஒன்றிய தலைவர் செல்வம் தலைமையில் அந்தக் கட்சியினர், வங்கி மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, வங்கி மேலாளர் தமிழ்இனியன்  இனி இதுபோன்ற தவறுகள் நடைபெறாது என கூறி அவர்களை சமாதானம் செய்தார்.  இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்