போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்காணிக்க நவீன செயலி...

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை பொதுமக்களே கண்காணித்து நவீன செயலி மூலம் புகார் அளிக்கும் வசதியை சென்னை காவல்துறை ஆணையர் அறிமுகம் செய்துள்ளார்.
x
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை பொதுமக்களே கண்காணித்து நவீன செயலி மூலம் புகார் அளிக்கும் வசதியை சென்னை காவல்துறை ஆணையர் அறிமுகம் செய்துள்ளார். காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இதற்கான நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் முதற்கட்டமாக 352 போக்குவரத்து அமலாக்கப் பிரிவு காவல்துறை அதிகாரிகளுக்கு  நவீன இ- சலான் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. இந்த இயந்திரத்தில் அபராதத்தை நேரடியாக கார்டுகளை பயன்படுத்தி ஸ்வைப் செய்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் நேரடியாக வட்டார  போக்குவரத்துத் துறையில் இணைக்கப் பட்டிருப்பதால் , வாகனம் மற்றும் ஓட்டுனர்களின் முழு விவரங்களை இயந்திரம் மூலம் பெற முடியும். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் ஏ.கே விஸ்நாதன்,  காவல்துறை அதிகாரிகள் போக்குவரத்து விதி மீறினாலும் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்