தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கியது

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, ஜி. உசிலம்பட்டி, கண்டமனூர், ஆத்தங்கரைப்பட்டி, கோவிந்த நகரம், சீப்பாலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட காற்றாலைகள் செயல்பட்டு வருகிறது.
தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கியது
x
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, ஜி. உசிலம்பட்டி, கண்டமனூர், ஆத்தங்கரைப்பட்டி, கோவிந்த நகரம், சீப்பாலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட காற்றாலைகள் செயல்பட்டு வருகிறது. தற்போது, தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கியதை தொடர்ந்து, இங்குள்ள காற்றாலைகளில் மின்உற்பத்தி தொடங்கி உள்ளது. காற்றின் வேகம் வினாடிக்கு 11 முதல் 12 மீட்டர் என்ற அளவில் வீசி வருகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் போது, தேனி மாவட்டத்தில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையில், ஒரு காற்றாலையில் ஒருநாள் மின்சார உற்பத்தி சராசரியாக 20 ஆயிரம் யூனிட் என்ற அளவில் உள்ளது. மின்தேவை குறைந்து காணப்படுவதால், காற்றாலை மின் உற்பத்தி தினமும் 3 மணி நேரம் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்