ஹலோ எஃப்.எம் சார்பில் 'அம்மாவும் நானும்' நிகழ்ச்சி - ஏராளமான பெண்கள் பங்கேற்பு

திருச்சி ஹலோ எஃப்.எம் சார்பில் தாய் மகள் அன்பை கொண்டாடும் வகையில் அம்மாவும் நானும் என்கிற நிகழ்ச்சி நடைப்பெற்றது.
x
திருச்சி ஹலோ எஃப்.எம் சார்பில் தாய் மகள் அன்பை கொண்டாடும் வகையில் அம்மாவும் நானும் என்கிற நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் தங்கள் அம்மாவுடன் கலந்து கொண்டு அங்கு நடைப்பெற்ற குழு நடனம், சமையல் போட்டி, கவிதை போட்டி உள்ளிட்ட போட்டிகளில் உற்சாகமாக கலந்து கொண்டனர். மேலும் தந்தியும் தமிழும் என்கிற போட்டியில் தினத்தந்தி நாளிதழ் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, அதில் கலந்து கொண்ட அம்மாக்களும் மகள்களும் ஆர்வமுடன் பதில் அளித்தனர். தினமும் வீட்டு வேலைகளில் ஈடுபட்டு இருந்த தங்களுக்கு இது போன்ற நிகழ்ச்சி மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், நடைப்பெற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் சிறப்பாக இருந்ததாகவும் தாய்மார்கள் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்