சென்னை : ரூ32 லட்சம் மதிப்புள்ள சுறா மீன் பாகங்கள் பறிமுதல்

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் விமானத்தின் பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை : ரூ32 லட்சம் மதிப்புள்ள சுறா மீன் பாகங்கள் பறிமுதல்
x
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் விமானத்தின் பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சென்னையை சேர்ந்த மதார், மதுரையை சேர்ந்த ஷேக் மதார் ஆகியோரின் அட்டை பெட்டிகளில் சுறா மீனின் துடுப்பு மற்றும் வால்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதுபற்றி மத்திய வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தபோது, சுறா மீன் துடுப்பு மற்றும் வால்கள் ஏற்றுமதி செய்ய தடை உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து 2 பேரிடமும் இருந்து 64 கிலோ எடையிலான சுறா மீனின் துடுப்பு மற்றும் வால்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு 32 லட்ச ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்