கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் முறைகேடாக விற்பனை : நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பூவாண்டிப்பட்டியில் உள்ள தேசிகநாதர் சுவாமி கோயிலுக்கு 77 ஏக்கர் நிலங்கள் உள்ளன.
கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் முறைகேடாக விற்பனை : நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு
x
சிவகங்கை மாவட்டம்  காரைக்குடி அருகே பூவாண்டிப்பட்டியில் உள்ள  தேசிகநாதர்  சுவாமி கோயிலுக்கு 77 ஏக்கர் நிலங்கள் உள்ளன. அவற்றை  கோயில் முன்னாள் நிர்வாகிகள் 3 பேரிடம் பணம் கொடுத்து வாங்கி கிராம மக்கள் வீடுகட்டி அனுபவித்து வந்தனர். கோயில் நிலம் முறைகேடாக விற்கப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து  2 பேர் பவர் ஏஜெண்ட்டுகளாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை மற்றும்  வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்ட போது  மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நிலங்களை மீட்டு கோயில் நிர்வாகத்திட்ட் ஒப்படைத்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்