வீட்டில் பதுக்கி வைத்திருந்த போதை பொருட்கள் : 146 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது

சென்னை திருவொற்றியூர் சார்லஸ் நகர் பகுதியில் வசித்து வரும் டேனியல் என்பவர், தனது வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
வீட்டில் பதுக்கி வைத்திருந்த போதை பொருட்கள் : 146 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது
x
சென்னை திருவொற்றியூர் சார்லஸ் நகர் பகுதியில் வசித்து வரும் டேனியல் என்பவர், தனது வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சாத்தாங்காடு காவல் நிலைய தனிப்படை போலீசார் விரைந்து சென்று, அந்த வீட்டை சோதனையிட்டனர். அப்போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 146 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு 70 ஆயிரம் ரூபாய் என தெரிய வந்தது. இதனையடுத்து டேனியலை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்