டி.எஸ்.பி அலுவலகம் முன்பு தீக்குளித்த நபர் : மாமூல் கேட்டு போலீசார் தொந்தரவு செய்ததாக புகார்

மாமூல் கேட்டு போலீசார் தொந்தரவு செய்வதாக கூறி, மாமல்லபுரம் டி.எஸ்.பி அலுவலகம் முன்பு ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டி.எஸ்.பி அலுவலகம் முன்பு தீக்குளித்த நபர் : மாமூல் கேட்டு போலீசார் தொந்தரவு செய்ததாக புகார்
x
திருப்போரூரை சேர்ந்த நெல்லையப்பன் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மேல்வாடகைக்கு பார் எடுத்து நடத்தி வருகிறார். அவரிடம் திமுக பிரமுகர் மாதம்தோறும் வாடகையை உயர்த்தி வாங்குவதாகவும், போலீசார் மாமூல் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், முகநூலில் பக்கத்தில் இது குறித்து கருத்து பதிவு செய்துவிட்டு, டிஎஸ்பி அலுவலகம் முன்பு, தனது உடலில் மண்ணெண்ணெய்  ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் தீக்காயம் பரவிய நிலையில் மீட்கப்பட்ட அவர்,  தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்