"அரசு பள்ளிகளை தத்தெடுக்க விரைந்து அனுமதி" - தனியார் நிறுவனங்களுக்கு அமைச்சர் அழைப்பு

அரசு பள்ளிகளை தத்தெடுக்க விரும்பும் தனியார் நிறுவனங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
அரசு பள்ளிகளை தத்தெடுக்க விரைந்து அனுமதி - தனியார் நிறுவனங்களுக்கு அமைச்சர் அழைப்பு
x
அரசு பள்ளிகளை தத்தெடுக்க விரும்பும் தனியார் நிறுவனங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சமூக அக்கறை கொண்ட அந்த  நிறுவனங்களுக்கு எந்தவித தடையும், தாமதமும் இன்றி  உடனடியாக அனுமதி வழங்க வேண்டுமென்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசின் பணியோடு தனியார் பங்களிப்பும் இணையும் போதுதான் கல்வியின் தரம் மேலும் சிறக்கும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அவர், அரசு பள்ளிகளை தத்தெடுக்க தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்