தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது

நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது
x
நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 89 சவரன் நகை மற்றும் 80 ஆயிரம் ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளது. திருவேங்கடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் அவ்வப்போது, கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்து வந்தன. இதையடுத்து அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார்,  கணேசன் மற்றும் சின்னகருப்பசாமி ஆகிய இருவரை கைது செய்துள்ளது. விசாரணையில் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், அவர்களிடம் இருந்த 89 பவுன் நகை மற்றும் 80ஆயிரம் ரொக்கப் பணம் மீட்கப்பட்டது. இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்