வைகோவிடம் வாழ்த்து பெற்றார், திமுக எம்.எல்.ஏ.,

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏ சண்முகையா நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
வைகோவிடம் வாழ்த்து பெற்றார், திமுக எம்.எல்.ஏ.,
x
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏ சண்முகையா நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் உடனிருந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, காவிரி மேலாண்மை வாரிய உத்தரவின்படி கர்நாடகா தமிழகத்துக்கு தண்ணீர் வழங்குமா என்பதை  பொறுத்திருந்து பார்ப்போம் என்றார். திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்பது குறித்து கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என வைகோ தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்