சிறுவனை கடத்த முயற்சி : வடமாநில இளைஞருக்கு தர்மஅடி

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த தாதனூர் கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் திரிந்த வடமாநில இளைஞர் ஒருவரை பொதுமக்கள் தாக்கினர்
சிறுவனை கடத்த முயற்சி : வடமாநில இளைஞருக்கு தர்மஅடி
x
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த தாதனூர் கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் திரிந்த வடமாநில இளைஞர் ஒருவரை பொதுமக்கள் தாக்கினர். இதைப் பார்த்த அந்த வழியாக சென்ற லாரி ஓட்டுனர் ரமேஷ் அந்த இளைஞரை மீட்டு, அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவளித்துள்ளார். இந்நிலையில், ரமேஷ் குடும்பத்தினர் வீட்டு வேலையில் மூழ்கி இருந்தபோது, அவரது மகன்  தரணிடம் நைசாக பேசி, வடமாநில இளைஞர் அழைத்து சென்றதாகக் கூறப்படுகிறது.  திடீரென காணாமல் போன மகனை உறவினர்களுடன் ரமேஷ் தேடியுள்ளார்.  அப்போது, ஊர் எல்லையில் தரணை அழைத்துச் சென்றதைப் பார்த்து, மீட்டனர். இதையடுத்து, வடமாநில இளைஞரை கடுமையாக தாக்கினர். தகவலறிந்து வந்த போலீஸார், அவரை மீட்டதுடன், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்