12ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க வேண்டும் - பி.ஆர். பாண்டியன்

குறுவை சாகுபடிக்கு ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்
12ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க வேண்டும் - பி.ஆர். பாண்டியன்
x
குறுவை சாகுபடிக்கு ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க வேண்டும் என்று அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். மன்னார்குடியில்  செய்தியாளர்களை சந்தித்த அவர், நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின் படி, கர்நாடக அணைகளில் உள்ள நீரின் அளவை  ஆய்வு செய்யாமலும், பெங்களூரில்  அலுவலகம் திறக்காமலேயே ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், டெல்லியில் கடந்த 23ல்  சட்ட விரோதமாக கண்காணிப்புக்குழு கூட்டம் நடத்தப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார். கோதாவரியை இணைப்பதால் காவிரி டெல்டா பாசனத்திற்கு தீர்வு காணமுடியாது என்றும், ராசி மணலில் அணை கட்டினால் தான் தமிழகத்தையும்,  காவிரி டெல்டாவையும் பாதுகாக்க முடியம் என்று கூறினார். 28ம் தேதி நடைபெற உள்ள காவிரி ஆணைய கூட்டத்தில் ராசி மணல் அணை கட்ட தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் எனவும் பி.ஆர். பாண்டியன் கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்