"ஹைட்ரோகார்பன் திட்டம் தடுக்கப்படும்" - நாகை எம்.பி. செல்வராஜ்

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதிக்கு ஹைட்ரோகார்பன் திட்டம் வரவிடாமல் தடுத்து நிறுத்துவோம் என எம்.பி. செல்வராஜ் தெரிவித்தார்.
ஹைட்ரோகார்பன் திட்டம் தடுக்கப்படும் - நாகை எம்.பி. செல்வராஜ்
x
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதிக்கு ஹைட்ரோகார்பன் திட்டம் வரவிடாமல் தடுத்து நிறுத்துவோம் என எம்.பி. செல்வராஜ் தெரிவித்தார். திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்ற அவர், தமது வெற்றிக்காக பாடுபட்ட கூட்டணி கட்சியினரை சந்தித்து நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய செல்வராஜ், ஹைட்ரோகார்பன் திட்டம் தடுக்கப்படும் என்றார். திருத்துறைப்பூண்டி அகஸ்தியன்பள்ளி அகல ரயில் பாதை பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்