வீடு புகுந்து ஒருவர் வெட்டிக்கொலை : தலையை பையில் எடுத்துச் சென்ற மர்ம கும்பல்

மதுரை அய்யனார்புரம் ஆசிரியர் காலனியில் வசிப்பவர் லோகநாதன்.
வீடு புகுந்து ஒருவர் வெட்டிக்கொலை : தலையை பையில் எடுத்துச் சென்ற மர்ம கும்பல்
x
மதுரை அய்யனார்புரம் ஆசிரியர் காலனியில் வசிப்பவர் லோகநாதன். கோவில் பூசாரியான இவர், தனது அண்ணன் மகன் சௌந்தர் உடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது காரில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டின் உள்ளே  நுழைந்து செளந்தரை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க முயன்ற லோகநாதன் தலையிலும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. பின்னர் செளந்தர் தலையை வெட்டிய அந்த கும்பல் அதை பையில் வைத்து எடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது. தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதுடன், மர்ம கும்பலை தீவிரமாக  தேடி வருகின்றனர். -கொலை செய்யப்பட்ட செளந்தர் மீது கொலை, கொள்ளை  உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்