கார் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் : கார் மோதி காவலாளி ஒருவர் உயிரிழப்பு

ஈரோட்டில் கார் ரேஸில் இளைஞர்கள் ஈடுபட்ட போது, கார் மோதி காவலாளி ஒருவர் உயிர் இழந்தார்.
கார் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் : கார் மோதி காவலாளி ஒருவர் உயிரிழப்பு
x
ஈரோட்டில் கார் ரேஸில் இளைஞர்கள் ஈடுபட்ட போது, கார் மோதி காவலாளி ஒருவர் உயிர் இழந்தார். ஈரோடு கருங்கல்பாளையம் காவேரி சாலையில் இளைஞர்கள் சிலர், கார் ரேஸில் ஈடுபட்டனர். மதுபோதையில் இருந்த அவர்கள், காரை தாறுமாறாக ஓட்டியதில், ​பிரபல நகை கடை காவலாளி மீது கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜலிங்கம் என்ற காவலாளி உயிர் இழந்தார், மற்றொரு காவலாளி படுகாயமடைந்தார். விபத்தை ஏற்படுத்திய டிரைவர் உள்ளிட்ட 4 பேர் காரில் இருந்து இறங்கி தப்பி சென்றனர். நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த காட்சிகளை கொண்டு கார் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்