அரசு பள்ளிகளை பாதுகாக்க சைக்கிள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம்
அரசு பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி சென்னை தாம்பரத்தில் விழிப்புணர்வு சைக்கிள் பிரசாரம் தொடங்கியது.
அரசு பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி சென்னை தாம்பரத்தில் விழிப்புணர்வு சைக்கிள் பிரசாரம் தொடங்கியது. மார்க்கிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர், ரங்கராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய டி.கே.ரங்கராஜன், மதம், சாதியின் பெயரால் மக்களை பிரிவினை செய்வதை பா.ஜ.க அரசு தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். சிறுபான்மையின, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Next Story