ஆற்று மணல் ஆட்டோவில் கடத்தல் : போலீசார் தடுக்க முடியாமல் தவிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் மணல் கொள்ளையை தடுக்க முடியாமல் போலீசார் திணறி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆற்று மணல் ஆட்டோவில் கடத்தல் : போலீசார் தடுக்க முடியாமல் தவிப்பு
x
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் மணல் கொள்ளையை தடுக்க முடியாமல் போலீசார் திணறி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த மாதம் ஆரணி அருகே முனியன் குடிசை கிராமம் அருகே கமண்டலநாகநதி ஆற்றில் மணல் கடத்த முயன்ற  போது மண் சரிந்து சிறுவன் பலியானான். இச்சம்பவத்தையடுத்து மணல் கொள்ளையில் ஈடுபட்ட 
25க்கும் மேற்பட்டோரை  போலீசார் கைது செய்து 9பேர் மீது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். மணல் கொள்ளைக்கு  பயன்படுத்தபட்ட லாரி, டிராக்டர் , மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் சில நாட்கள் மணல் கொள்ளை நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் ஆட்டோவில் அதிகளவில் மணல் கடத்தப்படுவதாகவும், அதனை தடுக்க முடியாமல் போலீசார் தவித்து வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்