ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக அனுப்பப்பட்ட சம்மன்களில் இறுதி முடிவெடுக்கக் கூடாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்த வழக்கில் புதிதாக சம்மன்கள் அனுப்பக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
x
தூத்துக்குடியைச் சேர்ந்த மோகன் என்பவர், போராட்டம் குறித்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை சுந்தர், ஹேமலதா அமர்வு விசாரித்தது.விசாரணையின் முடிவில், சட்டவிரோத கைது நடவடிக்கைகளை நிறுத்துங்கள் என நீதிபதிகள் தெரிவித்தனர்.ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்பதே தமிழக அரசின் கொள்கை முடிவாக இருக்கும் நிலையில், அதே கருத்து கொண்டோரை துன்புறுத்துவது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினர்.போராட்டம் அடிப்படை உரிமை என குறிப்பிட்ட நீதிபதிகள், அரசின் நோக்கம் மக்களை பாதுகாப்பதா? அல்லது துன்புறுத்துவதா? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக 107, 111 பிரிவுகளின் கீழ் அனுப்பப்பட்ட சம்மன்களில் இறுதி முடிவெடுக்கக் கூடாது எனவும்,இந்த பிரிவுகளின் கீழ் புதிதாக சம்மன்களை அனுப்பக்கூடாது எனவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்