மணப்பாறை : குடிநீர் கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

குடிநீர் வழங்க கோரி மணப்பாறை அடுத்த நடுப்பட்டி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
மணப்பாறை : குடிநீர் கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
x
குடிநீர் வழங்க கோரி மணப்பாறை அடுத்த நடுப்பட்டி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது குடிக்க மது கேட்கவில்லை தண்ணீர் கோருகிறோம் என போராட்டத்தில் முழக்கம் எழுப்பப்பட்டது. மக்களின் குற்றச்சாட்டுகளை கேட்க மறுத்த அதிகாரியுடன், மக்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். சிறிது நேர பரபரப்புக்கு பிறகு அங்கு வந்த போலீசார், மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்