தூத்துக்குடி துப்பாக்கி சூடு - மீளா துயரத்தில் முத்து நகர்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்தின் ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு - மீளா துயரத்தில் முத்து நகர்
x
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்தின் ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 13 உயிரிழந்தனர். இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரிழந்த ரஞ்சித்தின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களில் ஒருவரான கிளாட்சன் இல்லாமல் அவரது குடும்பம் தனிமையில் தவித்து வருவதாக அவரது அண்ணன் மகன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதேபோல் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த கார்த்திக்கின் தாய் மற்றும் சகோதரி தங்கள் துயரங்களை பகிர்ந்து கொண்டனர்.

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த கந்தையாவின் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை பராமரிக்க மிகவும் சிரமப்படுவதாக அவரது சகோதரி வேதனை தெரிவித்துள்ளார். 

உயிரிழந்தவர்களில்  ஒருவரான சண்முகத்தின் குடும்பத்தினர் சென்னையில் குடியேறிவிட்டனர். ஜெயராமனின் குடும்பத்தினர் உசிலம்பட்டியில் உள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து  இன்றுடன் ஓராண்டு முடிவடைந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் மீளா துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்