பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை - கைது செய்யப்பட்ட சபரிராஜன் வீட்டில் சி.பி.ஐ. சோதனை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சபரிராஜன் வீட்டில் சி.பி.ஐ. போலீசார் சோதனை மேற்கொண்டனர்
பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை - கைது செய்யப்பட்ட சபரிராஜன் வீட்டில் சி.பி.ஐ. சோதனை
x
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி மற்றும் ஆனைமலையில் உள்ள திருநாவுக்கரசின் வீடுகளில் சி.பி.ஐ. போலீசார் இரண்டு கட்டங்களாக சோதனையிட்டு பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். இந்நிலையில், எம்.ஜி.ஆர். நகரில் உள்ள சபரிராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் ஏதுனும் கைப்பற்றப்பட்டதா என்பது பற்றி அதிகாரிகள் எதுவும் கூறவில்லை. இதற்கிடையே, கைதான மற்றவர்களின் வீட்டிலும் சோதனை நடைபெறும் எனவும் மேலும் சிலர் கைதாகலாம் எனவும் கருதப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்