"ஷவர் பாத்தில் குளிக்காதீங்க" - குடிநீர் வாரியம் வேண்டுகோள்

சென்னையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க வீடுகளில் ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் என்று சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
x
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்தது போனதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீ சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சோழவரமும், செம்பரம்பாக்கமும் வறண்டு விட்டதால் குடிநீர் தட்டுப்பாடு உருவாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் சென்னை குடிநீர் வாரியம் சில வேண்டுகோள்களை விடுத்துள்ளது. அதன்படி, ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. ஷவர்பாத்தில் குளிக்கும் போது, 40 முதல் 50 லிட்டர் வரை தண்ணீர் வீணாகிறது என்றும், ஆனால் பக்கெட்டில் பிடித்து குளிக்கும் போது 5 முதல் 8 லிட்டரே செலவாகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அறிக்கையில் வெஸ்டன் டாய்லெட்டை பயன்படுத்த வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது டாய்லெட்டை பயன்படுத்திய பிறகு அதனை சுத்தம் செய்ய 5 முதல் 8 லிட்டர் தண்ணீர் வீணாகிறது  என்றும், இந்திய கழிப்பறைகளை பயன்படுத்தும் போது, 1 லிட்டரில் சுத்தம் செய்து விட முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல், கார்களை கழுவ 50 முதல் 70 லிட்டர் வரை வீணடிக்கப்படுவதால், ஈரத்துணி மூலம் கார்களை துடைக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வீட்டு தோட்டங்களில் உள்ள செடிகளுக்கு குடிநீர் பயன்படுத்துவதை விட, ஆழ்துளை கிணறுகளில் இருந்து பெறப்படும் உப்பு கலந்த தண்ணீரை பயன்படுத்த தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேண்டுகோள்களை ஏற்று, நீரை சிக்கமாக பயன்படுத்தினால், தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்