மதுராந்தகம் ஏரியை தூர்வார வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை...

20 கிராம மக்களின் வாழ்வாதாரமான மதுராந்தகம் ஏரியை தூர்வாரி கொடுக்க வேண்டும் என 15 ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
x
காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரி, மதுராந்தகம் ஏரி... 2 ஆயிரத்து 211 ஏக்கர் பரப்பளவு கொண்ட  இந்த ஏரியை நம்பி, 20க்கும் மேற்பட்ட கிராமங் மக்கள்  விவசாயம் செய்துவருகின்றனர். ஆனால், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏரி தூர்வாரப்படாமல் உள்ளதால், சுமார் 10 மீட்டர் ஆழம் வரை ஏரி தூர்ந்து போய் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் போதிய மழை பெய்தாலும், ஏரியில் நீர் தங்குவதில்லை. ஏரி தூர்வாரப்பட வேண்டும் என்பது அந்த ஏரியை நம்பி விவசாயம் செய்யும் மக்களின் 15 ஆண்டுகால கோரிக்கை. தமிழக அரசும் கடந்த நான்கு ஆண்டுகளாக சட்டமன்றத்தில்,  மதுராந்தகம் ஏரி தூர்வாரப்படும் என வாக்குறுதி அளித்தாலும், அதற்கான வேலைப்பாடுகள் எதுவும் தொடங்கவில்லை.....  இந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதால் தண்ணீரின்றி மாடுகள் மேயும் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது மதுராந்தகம் ஏரி. 

ஏரியின் பல பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குடியிருப்பு பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டும் விவசாயிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை தூர்வாரிக்கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகளின் 15 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப்படுமா...? தந்தி டி.வி. செய்திகளுக்காக மதுராந்தகத்தில் இருந்து செய்தியாளர் செந்தில்குமார்.

Next Story

மேலும் செய்திகள்