தந்தி டிவியின் தாக்கம் - சிக்கல் கிராம மக்களுக்கு தண்ணீர் கிடைத்தது...

ராமாதபுரம் மாவட்டம் சிக்கல் கிராமத்தில், தண்ணீர் பஞ்சம் நிலவிய நிலையில், தந்தி டிவி செய்தி எதிரொலியாக, தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
x
சிக்கல் கிராம மக்கள் தண்ணீர் இன்றி தவிக்கும் அவலம் குறித்து கடந்த 8ஆம் தேதி தந்திடிவி செய்தியில், நீரும் நிலமும் என்ற செய்திதொகுப்பு ஒளிப்பரப்பானது. அதில், ஏரிக்குள் ஊற்று அமைத்து, சொற்ப தண்ணீருக்காக நாள் கணக்கில் காத்திருக்கும் மோசமான நிலை குறித்து விரிவாக விவரிக்கப்பட்டது. இதை கவனத்தில் எடுத்த மாவட்ட நிர்வாகம், அந்த கிராமத்துக்கு லாரி மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து சிக்கல் பஞ்சாயத்துக்கு தனி அலுவலராக உள்ள BDO அதிகாரி மூலம், தண்ணீர் வழங்கப்பட்டது. தண்ணீர் வழங்கியதோடு, நேரடியாக வந்த அலுவலர் மேகலா, ஆட்சியரின் உத்தரவுப் படி, அங்குள்ள பாண்டியன் ஊரணியில் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைக்க ஆய்வு செய்யவுள்ளதாக கூறினார். இதைத் தொடர்ந்து நீண்டநாள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாகவும், செய்தியை ஒளிபரப்பிய தந்தி டிவிக்கும், நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கும் அந்த கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.  


Next Story

மேலும் செய்திகள்