மின் பயனீட்டு அளவை குறைக்க 10 பவுன் தங்கம்.. செலவுக்கு ரூ.10000 - ஏமாந்த கோவிந்தன்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பித்தளை பாத்திரம் வாங்க, தங்கத்தை விற்ற கதையாக ஒருவர் செய்த சம்பவம் சிரிப்பையும், பரிதாபத்தையும் ஏற்படுத்துகிறது.
x
ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் ஒருபுறம்... கடும் வெயிலை ஆசுவாசப்படுத்த காற்றாடி என மின்பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது இயல்பானது. இதில், ஏகத்துக்கும் எகிரும் மின் பயனீட்டு அளவை குறைக்க நினைத்த ஆயிரத்தில் ஒருவர்தான் ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிக்கும் கோவிந்தன். சாலையில் நடந்து சென்ற அவரை அணுகிய நபர் ஒருவர், தாம் மின்சார வாரியத்தில் இருந்து வருவதாகவும், மின் பயனீட்டு அளவை குறைக்க வேறு வழி உள்ளதாகவும் கூறியுள்ளார். உடனடியாக வீட்டுக்கு அழைத்துவரப்பட்ட அந்த நபர், பயனீட்டு கருவியை பார்த்தார். தங்கத்தை வைத்து மின்பயனீட்டு அளவை குறைக்கலாம் என்று அவர் கூறியதை கேட்ட கோவிந்தன், பத்து சவரன் நகையை கொடுத்துள்ளார். செலவுக்கு10 ஆயிரம் ரூபாயும் கொடுக்கப்பட்டது. நம்பும்படி அவர் சீரியசாக பேசிக்கொண்டிருக்க, கோவிந்தன் சாருக்கு போன் வந்துள்ளது. வீட்டுக்குள் சென்ற அவரிடம் ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவதாக கூறிவிட்டு, மர்மநபர் அங்கிருந்து நகர்ந்துவிட்டார். போனில் உரையாடலை முடித்துவிட்டு திரும்பிய கோவிந்தன், தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதுகுறித்து, வங்கிச் செயலாளர் கோவிந்தன், உடனடியாக காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இந்தச் சம்பவம் பரிதாபத்தையும், நகைப்பையும் ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், கேப்பையில நெய் வடியுதுன்னா, கேட்பாருக்கு எங்க போச்சு புத்தி என்ற சொலவடையை ஞாபகப்படுத்துகிறது. 

Next Story

மேலும் செய்திகள்