"ஸ்டாலினை சந்திக்கிறார் சந்திர சேகர ராவ்..."

மாநில கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசிவரும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், இன்று தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்திக்க உள்ளார்
x
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. வுக்கு ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மாநில கட்சிகளின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறும் நிலை உருவாகும். இந்நிலையில், காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு மாற்றாக மூன்றாவது அணி ஒன்றை உருவாக்குவதில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவும் தனித்தனியாக மாநில கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை திருவனந்தபுரத்தில் கடந்த வாரம் சந்தித்து பேசிய, சந்திரசேகர ராவ் இன்று மாலை, திமுக தலைவர் ஸ்டாலினை, சென்னையில் சந்தித்து பேசுகிறார். இருவரும் சந்திக்க உள்ளதாக வெளியான தகவலை முதலில், இருகட்சிகளும் மறுத்த நிலையில், இன்று இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. இதனையொட்டு இருமாநில போலீசாரும், சென்னையில் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்