பாலியல் உறவுக்கு ஆன்லைனில் பணம் கட்டி ஏமாந்த போலீசார்
பதிவு : மே 12, 2019, 08:36 AM
பாலியல் உறவுக்கு ஆன்லைனில் பணம் கட்டி ஏமாந்த போலீஸ்காரர்கள், பாலியல் தொழில் செய்யும் பெண் இடைத்தரகரை மிரட்டி நகைகளை பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூந்தமல்லி பேருந்துநிலையம் அருகே ஒரு பெண், 3 இளைஞர்களிடம் நேற்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் சண்டை முற்றியதால், அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரோந்து பணியில் இருந்த போலீசார் அந்த 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் ஆயுதப்படை காவலர்கள் மோகன் மற்றும் சார்லஸ் வேளாங்கண்ணி என்பது விசாரணையில் தெரிய வந்தது. மற்றொருவர் இவர்களது நண்பர் ராஜசேகரன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலியல் தொழில் இடைத்தரகர்  ஒருவரை தொடர்பு கொண்ட இவர்கள், 20 ஆயிரம் ரூபாய் பணத்தை ஆன்லைனில் செலுத்தி உள்ளனர். அதன் பிறகு, பெண் இடைத்தரகர் தனது செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டதாக கூறப்படுகிறது. 

இரண்டு மாதங்கள் கழித்து அந்த செல்போன் நம்பர் மீண்டும் ஆன் செய்யப்பட்டதையடுத்து அதன் முகவரியை கண்டுபிடித்து அந்த பெண் இடைத்தரகர் வீட்டிற்கு சென்றுள்ளனர். போலீஸ்காரர்களை ஏமாற்றுகிறாயா என கூறி அந்த பெண்ணிடம் இருந்து 3 பவுன் தங்க நகைகளை அவர்கள் பறித்து சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்களை பூந்தமல்லியில் பார்த்த அந்த பெண், பொதுமக்கள் உதவியோடு பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாலியல் வேட்கைக்காக ஆன்லைனில் பணம் கட்டி ஏமாந்த போலீஸ்காரர்கள், பெண்ணை மிரட்டி நகைகள் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1553 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

5928 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6691 views

பிற செய்திகள்

இந்திய கடலோர காவல் படையினர் பாதுகாப்பு ஒத்திகை...

ராமேஸ்வர‌ம் கடற்கரை பகுதிகளில் இந்திய கடலோர காவல்படையினர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

12 views

ரயில்வே பாலத்தை மீண்டும் கட்டாதது ஏன்? - ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க ஆட்சியருக்கு உத்தரவு

ரயில்வே பாலத்தை மீண்டும் கட்டுவது சம்பந்தமாக விடுத்த கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது குறித்து ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு.

20 views

நீர்பிடிப்பு பகுதிகளில் மழை - பவானி சாகர் அணை நீர்மட்டம் உயர்வு

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு 2 ஆயிரத்து 300 கனஅடியாக உயர்ந்துள்ளது.

17 views

அத்தி வரதரை தரிசிக்க குவிந்த பக்தர்கள்...

அத்திவரதர் உற்சவத்தின் 18வது நாளான இன்று அத்திவரதர் கத்திரிப்பூ நிற பட்டாடை அணிந்து காட்சி தந்து வருகிறார்.

108 views

குறைந்த விலையில் பெட்ரோல் சேமிக்கும் இயந்திரம் - கோவை அரசு கல்லூரி மாணவர்கள் சாதனை

கோவை அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள், குறைந்த விலையில் பெட்ரோலை சேமிக்க உதவும் இயந்திரத்தை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

36 views

சென்னை விமான நிலையத்தில் ரூ.12.60 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல்...

அதில்12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சவூதி மற்றும் துபாய் நாட்டு பணம் இருந்தது.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.