பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் - மனு தள்ளுபடி

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கூடாது என எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
x
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் சிறைகளில் உள்ளனர். அதிக காலம் சிறையில் இருந்த அவர்களை சட்டப்படியும், கருணைப்படியும் விடுவிக்குமாறு பல்வேறு தரப்பும் கோரிவருகிறது. பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். எழுவர் விடுதலையை வலியுறுத்தும் கோரிக்கைகளை மசோதாவாக நிறைவேற்றி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது.  இதனிடையே, 7 பேரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் அமெரிக்கை நாராயணன், ராமசுகந்தம் மற்றும் ராஜிவ்காந்தியோடு மறைந்தவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 7 பேர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் என்று கூறியது. விடுதலைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தும் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தீர்ப்பு, 7 பேர் விடுதலையில் மீண்டும் ஆளுநர் மாளிகையை நோக்கி திருப்பியுள்ளது.   

7 பேர் விடுதலையை எதிர்த்த மனு தள்ளுபடி - அமெரிக்கை நாராயணன்(காங்கிரஸ்) கருத்து  


7 பேர் விடுதலையை எதிர்த்த மனு தள்ளுபடி - பாலகிருஷ்ணன் (சி.பி.எம்) கருத்து  


7 பேர் விடுதலையை எதிர்த்த மனு தள்ளுபடி - சுப. வீரபாண்டியன் கருத்து  


7 பேர் விடுதலையை எதிர்த்த மனு தள்ளுபடி - மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி கருத்து 


7 பேர் விடுதலையை எதிர்த்த மனு தள்ளுபடி - வைகோ கருத்து  




Next Story

மேலும் செய்திகள்