வறண்டு போன சோழவரம் ஏரி..

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான சோழவரம் ஏரி வறண்டதால், அங்கிருந்து மோட்டார் மூலம் தண்ணீர் அனுப்பும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
x
இதனால், சென்னை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகரின் குடிநீர் தேவையை செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஆகிய ஏரிகள் பூர்த்தி செய்கின்றன. இந்நிலையில் ஆயிரத்து 81 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரி வறண்டு, சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. எனவே, அங்கிருந்து மோட்டார் மூலம் புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்பும் பணிகள், காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளன. தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க, ஆந்திர அரசுடன் தமிழக அரசு பேசி, கிருஷ்ணா நதி நீரை பெற முயற்சிகள் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்