800 சவரன் நகை கொள்ளை வழக்கு - கேரளாவில் பெண் உள்பட இருவர் கைது

கோவையில், தனியார் நிதி நிறுவனத்தில் 800 சவரன் நகை கொள்ளை போன வழக்கில், பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
800 சவரன் நகை கொள்ளை வழக்கு - கேரளாவில் பெண் உள்பட இருவர் கைது
x
கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நுழைந்த முகமூடி கொள்ளையன், அங்குள்ள பெண்களை தாக்கி 800 சவரன் நகையை திருடிச் சென்றான். இது தொடர்பாக பெண் ஊழியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த கோவை போலீசார், 4 தனிப்படை அமைத்து கொள்ளையனை தேடி வந்தனர். இந்நிலையில், கேரளாவில் பதுங்கியிருந்த கொள்ளையன் சுரேஷை காவல்துறையினர் கைது செய்து, அவனிடமிருந்த நகைகளை பறிமுதல் செய்தனர். இந்த விவகாரத்தில் நாடகமாடிய பெண் ஊழியர் ரேணுகா-வும் கைது செய்யப்பட்டார். இருவரும் திட்டமிட்டு நகை கொள்ளையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்