குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் ஒரு மருத்துவர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைப்பு

கொல்லிமலையில் வீட்டில் பிரசவம் பார்த்துக்கொண்டவர்களின் விவரங்களை சரிபார்க்க 5 நபர்கள் கொண்ட 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
x
ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளில் 4 ஆயிரத்து 800 குழந்தைகள் பிறந்ததாகவும், அவர்களின் பிறப்பு சான்றிதழ்களை சரிபார்க்க 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ரமேஷ் கூறியுள்ளார்.  அதேபோல், கொல்லிமலையில் வீட்டில் பிரசவம் பார்த்துக் கொண்டவர்களின்  விவரங்களையும், முறைப்படி குழந்தை தத்து கொடுத்த ஆவணங்களையும் சரிபார்க்க 5 நபர்கள் கொண்ட 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்