கடல் சீற்றம் - தூண்டில் வளைவுகள் அமைக்க மீனவர்கள் கோரிக்கை

மேற்கு கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால், தூண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
கடல் சீற்றம் - தூண்டில் வளைவுகள் அமைக்க மீனவர்கள் கோரிக்கை
x
கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால், தூண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. கடல்சீற்றம் காரணமாக, நீரோடி, வள்ளவிளை, பூத்துறை கிராமங்களில் மீனவ மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மீனவர்கள், மீன் பிடிக்க செல்ல முடியாமல், பேரிடர் மேலாண்மை கட்டிடத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். தங்களது உடைமைகளை பாதுகாக்க, தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட வேண்டும் என, மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்