ஸ்டெர்லைட் ஆலை 2ஆம் கட்ட விரிவாக்கம் - சுற்றுச்சூழல் அமைச்சக அனுமதி இல்லாமல் நிலம் ஒதுக்கீடு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு அமைச்சக அனுமதி இல்லாமல், நிலம் வழங்கியதாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஸ்டெர்லைட் ஆலை 2ஆம் கட்ட விரிவாக்கம் - சுற்றுச்சூழல் அமைச்சக அனுமதி இல்லாமல் நிலம் ஒதுக்கீடு
x
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு அமைச்சக அனுமதி இல்லாமல், சிப்காட் நிறுவனம் நிலம் வழங்கியதாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மத்திய சுற்று சூழல் அமைச்சக இயக்குனர் கலியபெருமாள் தலைமையில் இந்த ஆய்வு நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  கலியபெருமாள், ஸ்டெர்லைட் ஆலை இரண்டாம் கட்ட விரிவாக்க கட்டுமானப் பணிகள் மற்றும் மின் இணைப்பு வழங்குவதற்காக பணிகள் நடைபெற்றுள்ளன. அதற்கான ஆதாரங்களை மத்திய சுற்று சூழல் அமைச்சகத்திடம் அளிக்க  உள்ளதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்